இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத குழுக்களை தூண்டிவிடுவதை பாகிஸ்தான் கொள்கையாக கொண்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவுடனான பிரச்னைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கு பதிலாக, பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் தூண்டி விடுவதாக குற்றம்சாட்டினார்.
ஒரு பிராந்தியத்தின் அமைதி-பாதுகாப்பு போன்றவை, அண்டை நாட்டின் உணர்வுகளைப் புரிந்திருத்தல், உள்விவகாரத்தில் தலையிடாதிருத்தல் ஆகியவற்றை சார்ந்திருப்பதாக ராஜ்நாத்சிங் குறிப்பிட்டார்.
பிராந்திய அளவிலான வளர்ச்சி மற்றும் அமைதிக்காக பாகிஸ்தானைத் தவிர மற்ற அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.