குஜராத் கலவரம் தொடர்பான வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 17 பேருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்துள்ள உச்சநீதிமன்றம், ஜாமீனில் இருக்கும் காலத்தில் சமூக சேவை (community service) செய்ய உத்தரவிட்டுள்ளது.
2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து, சர்தார்புராவில் 33 பேர் எரித்து கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 17 பேர், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இதன்மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், 17 பேருக்கும் ஜாமீன் அளித்துள்ள உச்சநீதிமன்றம், குஜராத் செல்லக்கூடாது, மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், ஜபல்பூரில் தங்கியிருந்து, நாள்தோறும் 6 மணி நேரம் சமூகசேவை செய்ய வேண்டும், இதை மாவட்ட சட்ட சேவைகள் துறையினர் (District Legal Services Authorities)உறுதிபடுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.