புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலாளர் வின்சன்ட் ராயர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் பிப்ரவரி மாதம் 12ம் தேதி காலை 9.30 மணிக்கு கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஎஃப்டி பஞ்சாலை மூடப்படும் என்ற அறிவிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.