பயணிகள் டிக்கெட் விற்பனை மூலம் ரயில்வேக்கு கிடைத்த வருவாய் குறைந்துள்ள நிலையில், சரக்கு வருவாய் சற்று உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே பதிலளித்துள்ளது. அதன்படி, டிக்கெட் விற்பனை மூலம் முதல் காலாண்டில் 13 ஆயிரத்து 398 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இரண்டாவது காலாண்டில் வருவாய் 13 ஆயிரத்து 243 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. மூன்றாவது காலாண்டில் 12 ஆயிரத்து 844 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
சரக்குகளை கையாண்டதில் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரயில்வே 29 ஆயிரத்து 66 கோடி ரூபாய் கிடைத்தது. 2வது காலாண்டில் 25 ஆயிரத்து 165 கோடி ரூபாயாக வருவாய் சரிந்த நிலையில், 3வது காலாண்டில் 28 ஆயிரத்து 32 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.