ஆந்திர அரசின் முக்கிய முடிவுகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதால் அம்மாநில சட்ட மேலவையை கலைக்கும் தீர்மானத்துக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திராவின் மூன்று தலை நகரங்கள் மசோதாவுக்கும், அமராவதியைச் சார்ந்து உருவாக்கப்பட்ட தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையமான சி.ஆர்.டி.ஏ.வை திரும்பப் பெறும் மசோதாவுக்கும் சட்ட மேலவையில் ஒப்புதல் பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த அவையையே கலைப்பது குறித்த கருத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கனவே சட்டப்பேரவையில் தெரிவித்த நிலையில் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்து.
சட்டப்பேரவையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ள நிலையில் இன்று இந்தத் தீர்மானம் விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவைகள் செயல்பட்டு வருகின்றன.