செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் விற்க முடிவு..!

Jan 27, 2020 12:03:12 PM

ர் இந்தியாவின் 100 சதவிகித பங்குகளையும் இந்திய தனியார் நிறுவனங்களுக்கு விற்று விட முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதற்கான விருப்பத்தை நிறுவனங்கள் தெரிவிக்க, வரும் மார்ச் மாதம் 17 ஆம் தேதியை கெடுவாக அறிவித்துள்ளது. 

தினசரி 20 முதல் 25 கோடி ரூபாய் வரை இழப்புடன் இயங்கி வரும்  ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்று விட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அதை வாங்க நினைக்கும் நிறுவனங்கள் வரும் மார்ச் 17 ஆம் தேதிக்குள் விருப்ப விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தன் வசம் உள்ள ஏர் இந்தியாவின் பங்குகளில் 76 சதவிகிதத்தை தனியாருக்கு விற்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் அதற்கு யாரும் ஆர்வம் காட்டாததை தொடர்ந்து 100 சதவிகித பங்குகளையும் விற்று விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவுக்கு இருக்கும் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளிட்ட இதர சுமைகளையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் எந்த அறிவிப்பும் சேர்ந்து வெளியாகி இருப்பதால், ஏர் இந்தியாவை வாங்க தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஏர் இந்தியாவை வாங்க  டாடா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டி இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

அதே சமயம் இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால்,  சில வெளிநாட்டு விமான நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ஏர் இந்தியாவை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த நிதியாண்டில் மட்டும் ஏர் இந்தியாவுக்கு  25 ஆயிரத்து 509 கோடி ரூபாய்  இழப்பு ஏற்பட்டது. வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கும் ஏர் இந்தியாவுக்கு தொடர்ந்து நிதிஉதவி அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ள மத்திய அரசு, இந்த இரண்டாவது விற்பனை அறிவிப்பும் பலனளிக்கவில்லை என்றால், அதை நிரந்தரமாக இழுத்து மூட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.


Advertisement
ஆந்திராவில் சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பவர் டம்மி உள்துறை அமைச்சர் - ஒய்.எஸ்.ஆர் கட்சி விமர்சனம்..!
உ.பி. அரசு கொண்டு வந்த மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் - உச்சநீதிமன்றம்
ஜார்கண்ட் மாநில அரசு மாஃபியாக்களின் அடிமையாகிவிட்டது - பிரதமர் மோடி
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பேருந்து - 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..
ரயில் தண்டவாளத்தில் மாணவி தவறி விழுந்த பதற வைக்கும் சிசிடிவி காட்சி
காலிஸ்தான் விவகாரத்தில் மோதல் வெடித்துள்ள நிலையில், இந்தியா - கனடா இடையே வார்த்தை மோதல் அதிகரிப்பு
தீபாவளி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முவுர் கொலை..
காரைக்கால் அரசு அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த திருநங்கை .!
புதுச்சேரி விடுதலைதினத்தையொடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி
நாடு முழுவதும் ஒளிவீசும் மின்விளக்குகளால் சிறப்படைந்த தீபாவளி பண்டிகை

Advertisement
Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மகத்தான சாய்ஸ் டிராகன் பழ சாகுபடியில் லாபமீட்டும் விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு ஏற்ற பயிர்!

Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..


Advertisement