குடியுரிமை சட்டம், காஷ்மீர் விவகாரங்கள் தொடர்பான 6 தீர்மானங்கள் பிரசல்ஸ் நகரில் கூடும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படுகின்றன.
மொத்தமுள்ள 721 உறுப்பினர்களில் 626 பேர் இத்தீர்மானம் கொண்டு வர ஆதரவை தெரிவித்துள்ளனர். இத்தீர்மானத்தின் மீது புதன் கிழமை விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்த ஐரோப்பிய நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது. ஆனால் இந்தியா இத்தீர்மனத்தை கொண்டு வர எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
குடியுரிமை சட்டம் , காஷ்மீர் சட்டப்பிரிவு ரத்து போன்றவை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகள் என்றும்,இந்த வாக்கெடுப்பை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று இந்தியா சார்பில் ஆட்சேபம் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அரசின் சட்டத்துக்கும் உரிமைக்கும் உட்பட்டவை என்பதால் இவற்றின் மீது ஐரோப்பிய நாடாளுமன்றம் வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.