அசாம் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளால் பதற்றம் நிலவுகிறது.
நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அசாம் மாநிலம் திப்ருகர், தின்சுகியா, சரோய்தியோ ஆகிய இடங்களில் சக்திவாய்ந்த 5 (grenade) வெடிகுண்டுகள் வெடித்து சிதறியுள்ளன.
அதில் ஒரு குண்டு குருத்வாரா அருகிலும், இன்னொரு குண்டு காவல்நிலையம் அருகிலும் வெடித்து சிதறின. குண்டுவெடிப்புகளில் யாரும் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ இல்லை.
இக்குண்டுவெடிப்புகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் சர்பானந்த சோனாவால், மக்கள் நிராகரித்து விட்டதால் ஏற்பட்ட விரக்தியினால் தீவிரவாத அமைப்புகள் குண்டுவெடிப்பு நிகழ்த்தியிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த குண்டுவெடிப்புகளை உல்பா தீவிரவாத அமைப்பு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.