செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

குடியரசு தின அணிவகுப்பில் முதன் முறையாக இடம் பெற்ற பல அம்சங்கள்

Jan 26, 2020 05:17:19 PM

நாட்டின் 71-வது குடியரசு தின விழா மற்றும் அணிவகுப்பில் முதன் முறையாக இடம்பெற்ற பல்வேறு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்....

குடியரசு தினத்தின்போது, பிரதமர்கள் டெல்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்துவதுதான் வழக்கம். இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி குடியரசு தினத்தை முன்னிட்டு முதன் முறையாக மரியாதை செலுத்தினார்.

சிறிது நேரம் மவுனம் அனுசரித்து, மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், முதன் முறையாகவும் முக்கிய சிறப்பம்சமாகவும் செயற்கைக் கோள் முறியடிப்பு சாதனமான மிஷன் சக்தி இடம் பெற்றது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்ட மிஷன் சக்தி,  நாட்டுக்கு எதிரான செயற்கைக் கோள்களை வீழ்த்துவதில் நாட்டின் திறனை நிரூபிக்கும் முக்கிய முன்னேற்றமாகும்.

இதேபோல அணிவகுப்பில் தனுஷ் வகை துப்பாக்கிகள் முதன் முறையாக இடம் பெற்றன. உள்நாட்டிலேயே ராணுவ தளவாட தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தனுஷ் வகை தானியங்கி துப்பாக்கிகள் 36.5 கிலோமீட்டர் தூரம் வரையான இலக்குகளை தாக்க வல்லவை.

முதன் முறையாக பெண் அதிகாரியான கேப்டன் தன்யா செர்ஜில் என்பவர் அனைத்து ஆண்கள் அணிவகுப்புப் பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கினார்.

ஜம்மு காஷ்மீர் முதன் முறையாக இந்த ஆண்டு குடியரசு தின அணி வகுப்பில் யூனியன் பிரதேசமாக பங்கேற்றது.

அணிவகுப்பில் முதல் முறையாக சி.ஆர்.பி.எஃப். வீராங்கனைகள் இரு சக்கர வாகனங்களில் நிகழ்த்திக் காட்டிய சாகசங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.

 

இதேபோன்று அணி வகுப்பில் முதன் முறையாக  திரிசூல வடிவில் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் அணிவகுத்தன. 


Advertisement
நானும் என்.சி.சி. மாணவர் தான் - பிரதமர் மோடி பெருமிதம்..
மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி
வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்
இந்திய மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் - விரட்டிப் பிடித்த கடலோரக் காவல்படையின்..
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Advertisement
Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி

Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..


Advertisement