குடியரசு தினத்தை முன்னிட்டு முக்கிய கட்டடங்கள் பலவும் வண்ண மின்விளக்குகளாலும் மூவர்ணங்களாலும் மின்னியது.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற வளாகத்தின் சவுத் பிளாக், நார்த் பிளாக் , இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களில் வண்ண விளக்குகள் ஒளி வீசின..
மும்பையின் கேட் வே ஆப் இந்தியா , சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், மத்திய பிரதேசம் போபாலில் சட்டமன்றக் கட்டடம், பீகாரின் பாட்னாவில் உள்ள தலைமைச் செயலகம் போன்றவையும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
கொல்கத்தாவின் ஆளுநர்மாளிகை, காவல் தலைமையக வளாகம், அஸ்ஸாம் மாநில தலைநகரான கவுஹாத்தி உயர்நீதிமன்ற கட்டடம், ஜனதா பவன், பஞ்சாப் மாநிலம் அட்டாரி எல்லை பகுதி போன்றவையும் வண்ண விளக்குகளால் ஒளியை மின்னலடித்தன.