சீனாவில் பரவிவரும் கோரனோ வைரசை இந்தியாவில் பரவாமல் தடுப்பது குறித்து பிரதமர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே. மிஸ்ரா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் பங்கேற்றனர். கோரனோ வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் ஏழு முக்கிய விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வந்த சுமார் 20 ஆயிரம் பயணிகளின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு புனே ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, பிரதமர் மோடியை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அரசின் நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.