மகாத்மா காந்தியின் அகிம்சை வழி கொள்கைகளை இளைஞர்கள் மறந்து விடக்கூடாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தி உள்ளார்.
குடியரசு தினத்தை ஒட்டி நாட்டுமக்களுக்கு உரையாற்றிய அவர், 71-வது குடியரசு தினத்தை எதிர் கொள்ளும் நமக்கு உரிமை, கடமை இருக்கிறது என்றார். மகாத்மா காந்தியின் போதனைகளை தினந்தோறும் பின்பற்றினால், அரசியல் சட்டத்தை பின்பற்றுவது எளிது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு இஸ்ரோ நிகழ்த்திய சாதனைகள் பெருமை அளிப்பதாகவும், கல்வி மற்றும் மருத்துவத்துறைகளில் நாடு முன்னேற்றம் கண்டுவருவதாகவும் அவர் கூறினார்.
மக்கள் தொகை பெருக்கத்தை எதிர்கொள்ள புதிய திட்டம் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மகாத்மா காந்தியின் அகிம்சை வழியை இன்றைய இளைஞர்கள் கட்டாயம் நினைவில் கொள்ளவேண்டும் என்ற அவர், இந்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.