முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்களித்த நபர்களை சிறப்பிக்கும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஜார்ஜ் பெர்ணான்டஸ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு பேரில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமும் ஒருவர்.
இதே போன்று தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகரான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், தொழிலதிபர் வேணு சீனிவாசன் உள்ளிட்ட 16 பேர் பத்மபூஷண் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர். இதே போன்று பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சமூக சேவகரும் அமர்சேவா சங்கத்தை சேர்ந்தவருமான எஸ்.ராமகிருஷ்ணன் , தமிழகத்தைச் சேர்ந்த பிரதீப், லலிதா மற்றும் சரோஜா, மனோகர் தேவதாஸ், கலீல் சபி மகபூப் மற்றும் சேக் மகபூப், புதுச்சேரியைச் சேர்ந்த முனுசாமி உள்பட 118 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.