நீர்மூழ்கி கப்பலில் இருந்து பாய்ந்து சென்று இலக்கை தாக்கவல்ல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இந்தியா 2-வது தடவையாக வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.
நீர்மூழ்கி கப்பலில் இருந்து பாய்ந்து சென்று இலக்கை தாக்கவல்ல பாலிஸ்டிக் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடல் பகுதியில் கே-4 நீர்மூழ்கி கப்பலில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. நேற்று 2-வது நாளாக அங்கு இச்சோதனை நடைபெற்றது.
3,500 கி.மீ.வரை பறந்து சென்று இலக்கை தாக்கக்கூடிய இந்த ஏவுகணை,சோதனை வெற்றி பெற்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ஒட்டுமொத்த பாகிஸ்தானையும், சீனாவின் பல பகுதிகளையும் எட்டக்கூடியது.