இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சனைகளை பேசித் தீர்க்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் அதற்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என்றும் நேபாளம் கூறி உள்ளது.
பேச்சுவார்த்தைக்கு இரண்டு நாடுகளும் முன்வர வேண்டும் என்று கூறியுள்ள நேபாள அரசு வட்டாரங்கள், எந்த மத்தியஸ்தரும் இல்லாமல் நேரடியாக பேசிக் கொள்வது தான் சிறந்தது என்றும் தெரிவித்துள்ளன.
இந்திய-பாகிஸ்தான் தாவாக்களால் தெற்காசிய கூட்டமைப்பான சார்க்கில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக கவலை தெரிவித்துள்ள நேபாளம், உறுப்பு நாடுகளுக்கு இடையே நிலவும் தவறான எண்ணங்கள் களையப்பட்டு அதற்கு புத்துயிர் ஊட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் நேபாளம் ஒரு நடுநிலையான நாடு. சத்தியம் மற்றும் உண்மையை நேசிக்கும் நாடு. எனவே பிரச்சனைகளை பேசி தீர்க்க ஒரு கருவியாக செயல்பட முடியும் என நாங்கள் நம்புகிறோம் என நேபாள அரசு கூறியது.