பாஜக தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.பி.நட்டா, அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
பாஜக செயல் தலைவராக பதவி வகித்துவந்த ஜே.பி.நட்டா கட்சியின் தேசிய தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் கட்சியின் மூத்த தலைவர்களும் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர்களுமான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் இல்லங்களுக்கு நேரில் சென்ற நட்டா, அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜே.பி.நட்டா, கட்சினருக்கு மிகுந்த உத்வேகம் அளிக்கக் கூடிய ஒரு சக்தியாக அத்வானி திகழ்வதாக புகழாரம் சூட்டியுள்ளார்.