டெல்லியில் செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்டவனின் விரலை, பாதிக்கப்பட்ட இளைஞர் கடித்து துப்பிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
தேவ்ராஜ் என்பவர் பூங்கா ஒன்றில் அமர்ந்து தனது செல்போனில் தகவல்களை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை அணுகிய இரு நபர்களில் ஒருவன் அவரது வாயை மூடிக்கொள்ள மற்றொரு நபர் அவரது முகத்திலும் தலையில் சரமாரியாகத் தாக்கியதோடு செல்போனைப் பறித்துள்ளான். அப்போது தேவராஜ் தனது வாயை மூடியிருந்தவனின் விரலில் ஒன்றை அழுத்தமாக கடித்து துப்பினார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த மக்கள் ரத்தம் சொட்டச் சொட்ட நின்றிருந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரின் விரலை இணைக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே செல்ஃபோனுடன் தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.