தேர்தல் நடைமுறைகளை, அதிக செயல்துடிப்பு உள்ளதாகவும், மக்களின் பங்களிப்பு நிறைந்த ஒன்றாகவும் மாற்றியதற்காக, நாட்டு மக்கள், தேர்தல் ஆணையத்திற்கு நன்றிக்கடன் பட்டவர்களாக உள்ளனர் என்று, பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜனவரி 25 ஆம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக தேர்தல் ஆணையம் அனுசரிக்கிறது. அதை ஒட்டி டுவிட்டரில் பிரதமர் மோடி இந்த செய்தியை பதிவு செய்துள்ளார்.
ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், தேர்தலில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வாக்களிப்பதற்கான உத்வேகத்தை தேசிய வாக்காளர் தினம் உருவாக்கட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த தினத்தை தேசிய வாக்காளர் தினமாக அது அனுசரித்து வருகிறது