செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

குடியரசு தினத்தை ஒட்டி டெல்லியில் இதுவரை இல்லாத பாதுகாப்பு

Jan 25, 2020 06:40:20 PM

குடியரசு தினத்தை ஒட்டி டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அங்கு ராணுவத்தினரும் போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். நாட்டின் 71 வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இவ்விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் முப்படை அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் அலங்காரயூர்திகளின் அணிவகுப்பு ஆகியவை இடம்பெறுகின்றன. குடியரசு தினவிழா கொண்டாட்டத்திற்கான ஒத்திகைகள் முடிந்திருக்கும் நிலையில், விழா நடைபெறும் ராஜ பாதை முதல் செங்கோட்டை வரையிலான பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சீருடை அணிந்த 22,000 டில்லி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையினர், துணை இராணுவ படைவீரர்கள் என பல்வேறு குழுக்களாக ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். முக்கிய இடங்களான செங்கோட்டை, சாந்தி சவுக் என்கின்ற, 150க்கும் மேற்பட்ட இடங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பேருந்து மற்றும் இரயில் நிலையங்களிலும் தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன.

டெல்லிக்கு இரயில் மூலம் வரும் பார்சல் சர்வீசுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரியவர்களை முக அங்கீகாரம் முறையில் பரிசோதிப்பதற்காக டெல்லி போலீசாரால் பல இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முக்கிய இடங்களில் சிறப்பு ஆயுதப்படை காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது தவிர 48 கம்பெனிகளை சேர்ந்த சிறப்பு ஆயுதப்படையினரும் டெல்லி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

என்எஸ்ஜி, எஸ்பிஜி மற்றும் ஐடிபிபி போன்ற அமைப்புக்கள் தீரவிமாக கண்காணித்து வருகின்றன.இதேபோல், டெல்லியில் பாரா கிளைடர்கள், பாரா மோட்டார்கள், ஹேங் கிளைடர்கள், ஆளில்லா சிறிய விமானங்கள், இலகுரக விமானம், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானம், ஹாட் ஏர் பலூன்கள் ஆகியவை பறக்க அடுத்த மாதம் 15ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.எப்போதும் இல்லாத வகையில் குடியரசு தினத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. 

இதனிடையே, விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் டெல்லியில் முன்னெச்சரிக்கையாக 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிரிமினல்களை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்ய பேசியல் ரிககனிசன் அமைப்பு (facial recognition system), டெல்லியின் முக்கிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் டெல்லி முழுவதும் நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதில் செங்கோட்டை, சாந்தினி செளக், யமுனா காதர் ஆகிய பகுதிகளில் மட்டும் 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டெல்லியை ஒட்டியுள்ள பிற மாநிலங்களின் எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. புதுடெல்லி மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வரையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து துணை ராணுவப்படையை சேர்ந்த ஏராளமான வீரர்களும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி முழுவதும் இரவு நேர ரோந்து, வாகன தணிக்கை ஆகியவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், விமான நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 


Advertisement
மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி
வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்
இந்திய மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் - விரட்டிப் பிடித்த கடலோரக் காவல்படையின்..
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேவ் தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் முழுவதும் விழாக் கோலம்

Advertisement
Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி

Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..


Advertisement