ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
பிஜு பட்நாயக் பன்னாட்டு விமான நிலையத்தின் ஒன்றாவது முனையத்தையும் 2வது முனையத்தையும் இணைக்கும் கட்டிடத்தின் கட்டுமானப் பணி நடந்து வரும் நிலையில் அதன் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் தீயணைப்பு வீரர்களும் இடிபாடுகளை அகற்றி விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.