ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவதா என்று மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமக்கு அரசுடன் எந்த வித முரண்பாடும் இல்லை என்று கூறிய அவர் மம்தா தலைமையிலான அரசு தம்முடன் மோதல் போக்கை வளர்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள மேற்கு வங்க ஆளுநர், பிரதமர் மோடி கொல்கத்தா வந்த போது மம்தா அந்த கூட்டத்தில் தம்முடன் பங்கேற்றதையும் அப்போது மம்தா மிகவும் கனிவாக பேசியதையும் நினைவு கூர்ந்தார்.
ஆனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் அரசின் சட்டத்திற்கு எதிராக பிரச்சாரம்செய்ய வாரியிறைக்கப்படுவது சட்டத்துக்கு விரோதமானது என்பதால் தாம் கண்டிக்க நேர்ந்தது என்றும் ஆளுநர் தெரிவித்தார்.