ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட இணைய சேவைகள் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன .
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதையடுத்து,வதந்திகள் பரவுவதைத் தடுக்க இணை சேவைகள் நிறுத்தப்பட்டன.
இன்று முதல் அவை சில கட்டுப்பாட்டுகளுடன் மீண்டும் இயங்கத் தொடங்கும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. இணையத்திற்கு 2 ஜி வேகம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
சோதனை முயற்சியாக இன்று முதல் இம்மாத இறுதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய இணைய சேவை வழங்கப்படும் என்று அரசுத்தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வெள்ளைப் பட்டியலில் உள்ள இணைய தளங்களின் சேவையை பயன்படுத்தலாம் என்றாலும் முகநூல், டிவிட்டர் , வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களுக்கான தடை நீடிக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.