இளைஞர்கள் தங்களது கடமையை செய்வதன் மூலம் தேசத்திற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ள இருக்கும் இளைஞர்கள் மத்தியில் பேசிய பிரதமர், இளைஞர்கள் கடமையை சரிவர செய்வது, புதிய இந்தியாவை கட்டமைக்க வழிவகுக்கும் என்றார்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் எந்த நபரும், எந்த பகுதியும் பின்தங்கி விடக் கூடாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறிய மோடி, அதுவே குடியரசு தின விழா அணிவகுப்பின் குறிக்கோள் என்றார்.
முன்னதாக, குடியரசு தலைவரிடம் இருந்து வீரதீரச்செயல்களுக்கான பாலசக்தி புரஸ்கார் விருது பெற்ற சிறுவர் மற்றும் சிறுமியருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்த சாதனைகள், எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த உத்வேகமூட்டுவதாக இருக்கும் என்று பாராட்டு தெரிவித்தார்.