முகேஷ் அம்பானி வீட்டு முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப் வீரர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் தவறுதலாக சுட்டுக் கொண்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தெற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட வீட்டின் முன்பு, குஜராத் மாநிலம் ஜூனாகாத் பகுதியை சேர்ந்த தேவ்தன் பகோத்ரா என்ற சி.ஆர்.பி.எப் வீரர் பணியமர்த்தப்பட்டிருந்தார்.
புதன்கிழமை மாலை வழக்கம் போல் பணியிலிருந்த தேவ்தன், தான் வைத்திருந்த துப்பாக்கியை தவறுதலாக சுட்டதில் நெஞ்சுப்பகுதியில் 2 தோட்டாக்கள் பாய்ந்து காயமடைந்துள்ளார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.