ஆந்திராவில் சட்டமேலவையைக் கலைப்பதற்காக வருகிற திங்களன்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது.
ஆந்திர மாநில சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மக்கள் நலத்திற்காக அரசு கொண்டு வரக்கூடிய சட்ட மசோதா அனைத்தையும் தடுக்க நினைக்கும் மேலவை தேவையா என்பதை அனைவரும் ஆலோசிக்க வேண்டும் என்றார்.
நிதி பற்றாக்குறை உள்ள இந்த மாநிலத்தில் இந்த சட்ட மேலவை வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து விவாதிக்க பேரவை கூட்டப்பட வேண்டும் என்றார். இதற்கு சட்டப்பேரவை தலைவர் தம்மினேனி சீதாராம் முதல்வர் கேட்டுக்கொண்டதற்கிணங்க திங்கட்கிழமை சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.