அட்லஸ் சைக்கிள் கம்பெனி உரிமையாளரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் முன்னணி சைக்கிள் நிறுவனங்களில் ஒன்று அட்லஸ் சைக்கிள்ஸ். இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சஞ்சய் கபூரின் மனைவி நடாஷா கபூர், டெல்லியில் உள்ள தமது வீட்டில் சீலிங் பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
நடாஷா கைப்பட எழுதிய கடைசி கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் கணவரும் பிள்ளைகளும் உடல்நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என உருக்கமாக குறிப்பிட்டுள்ள நடாஷா, தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிடவில்லை.
53 வயதான நடாஷா, ஏதேனும் மனஅழுத்தத்தில் இருந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் போலீசார், அவர் எழுதிய கடிதத்தை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.