நண்பனின் மனைவி மீது நீண்ட நாட்களாக கண் வைத்திருந்த நால்வர், சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டு துப்பாக்கி முனையில் கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரேதேச மாநிலம் பரேலி நகருக்கு அருகே அமைந்துள்ள sirouli கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்த ஒருவரின் இளம் மனைவி மீது, அந்த கணவரின் 4 நண்பர்கள் நீண்ட நாட்களாக ஒரு கண் வைத்திருந்துள்ளனர். எப்படியாவது நண்பனின் மனைவியை அடைந்தே தீருவது என்ற வெறி அந்த நாலவருக்கு நாளுக்கு நாள் அதிகமானது.
இதற்கு தடையாக உள்ள நண்பனை எப்படி அகற்றுவது என்று தீர யோசியத்த நால்வரில் ஒருவன், 1 கிலோ போதை பொருளை கடத்திய புகாரில் இளம்பெண்ணின் கணவரை சாதுர்யமாக சிக்க வைத்து விட்டான். இதனை அடுத்து பொய் புகாரில் கைது செய்யப்பட்ட அந்த அப்பாவி கணவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இளம்பெண்ணை அடைய முட்டுக்கட்டையாக இருந்த கணவனை சிறைக்கு அனுப்பி விட்டதை அடுத்து, சமீபத்தில் நடு இரவில் வீடு புகுந்த அந்த நால்வர், துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவரின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற போது, அவர்களிடம் இருந்து தப்பித்த அப்பெண் கூச்சலிட்டுள்ளார். எனவே ஊர் கூடிவிடும் என்ற பயத்தில் நால்வரும் தப்பித்துள்ளனர்.
தப்பிக்கும் தருணத்தில் போலீஸிடம் எங்கள் பற்றி புகார் தெரிவித்தால் உன்னை தேடி வந்து கொன்று விடுவோம் என மிரட்டி சென்றுள்ளனர். இதனால் பயத்திலேயே இரு நாட்களை ஓட்டிய பின்னர், ஒரு வழியாக துணிவு வந்து போலீசில் புகார் அளித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண்.
இதனை அடுத்து தப்பி சென்ற நால்வரையும் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.