காஷ்மீர் பிரச்சனை இருதரப்பு விவகாரம், அதில் மூன்றாவது நாட்டுக்கு இடமில்லை என்று இந்தியா திரும்ப திரும்ப வலியுறுத்தி வரும் நிலையில், காஷ்மீர் எல்லைப் பிரச்சனை பற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் சேர்ந்து விவாதித்ததாக அமெரிக்க அதிபர் கூறிஉள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோஸில் உலக பொருளாதார அமைப்பின் கூட்டம் நடக்கிறது. அதில் பங்கேற்க வந்த டிரம்ப், இம்ரான் கானுடன் இந்த பேச்சுவார்த்தையை நடத்தியதாக கூறியுள்ளார்.
இம்ரான் கான் தமது சிறந்த நண்பர் என்று பாராட்டி உள்ள டிரம்ப், காஷ்மீர் பிரச்சனையை உன்னிப்பாக கவனிப்பதுடன் தேவைப்பட்டால் அதற்கு தீர்வு காண அமெரிக்கா உதவத் தயார் என்றும் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த ஆண்டு, ஒசாகா உச்சிமாநாட்டின் போது காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண தம்மை பிரதமர் மோடி அழைத்ததாக தவறான தகவலை கூறி
டிரம்ப் சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.