பிரதமர் மோடி இன்று பிரகதி குழுவினருடன் 32வது முறையாக கலந்துரையாடுகிறார்.
அரசின் திட்டங்களை வெளிப்படையாகவும் இணையம் வழியாகவும் செயல்படுத்துவதற்காக கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரகதி என்ற குழுவை உருவாக்கிய பிரதமர் மோடி ஜூலை மாதத்தில் அதன் முதல் கூட்டத்தில் பங்கேற்றார்.
ஆயுஷ்மான் பாரத் என்ற பிரதமரின் சுகாதாரக் காப்பீடு திட்டம், அனைவருக்கும் சொந்த வீடு திட்டம், குடிநீர் பாதுகாப்பு திட்டம், போன்ற பல்வேறு அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து இக்கூட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார். 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை நிறைவேற்றவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 31 கூட்டங்களில் பிரகதி மூலம் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய்க்கான அரசின் நலத்திட்டங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன.