என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு தகவல்களைத் தருவது கட்டாயமில்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பின்போது மக்கள் தங்கள் விருப்பத்தின்பேரில் தகவல்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும் இதில் கட்டாயம் ஏதுமில்லை என்று கூறிய அவர், கணக்கெடுப்பு அரசியல்சாசனத்திற்கு உட்பட்டது என்பதால் இதனை மாநில அரசுகள் எதிர்க்க முடியாது என்றும் குறிப்பிட்டார். மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநில அரசுகள் என்பிஆர் கணக்கெடுப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.