குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்ட 144 மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்கிறது.
கடந்த மாதம் 18ம் தேதி இந்த வழக்குகளை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்,அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. இன்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அதன் விசாரணை தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க அரசு சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. கடந்த டிசம்பர் 12ம் தேதி நாடாளுமந்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத் திருத்தம் அண்டை நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வகை செய்கிறது.