இந்தியா- நேபாளம் இடையே ஒருங்கிணைந்த சோதனை சாவடியை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேபாள நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலியுடன் இணைந்து அவர் காணொலி காட்சி மூலம் சாவடியை திறந்து வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, தோழமை உள்ள அண்டை நாடுகளுடனான போக்குவரத்தை மேலும் வலுப்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது என்றார். வணிகம், கலை, கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நேபாளத்துடன் இந்தியா இணைந்து செயல்படும் என்றும் அவர்கூறினார்.
பின்னர் பேசிய நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, இருநாடுகளுக்கும் இடையிலான அனைத்து பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்றார். இந்தியாவுடன் நெருங்கி செயல்பட நேபாளம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.