50 லட்சம் முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் அடையாளம் காணப்பட்டு, இந்தியாவை விட்டு விரட்டியடிக்கப்படுவார்கள் என்று மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், 50 லட்சம் முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் அடையாளம் காணப்படுவார்கள் எனவும், அவசியம் ஏற்பட்டால் அவர்கள் நாட்டை விட்டு விரட்டியடிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.
முதலில் வாக்காளர் பட்டியலில் இருந்து முஸ்லிம் ஊடுருவல்காரர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்று கூறிய அவர், அவ்வாறு செய்தால், 2021ம் ஆண்டு மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் திரிணமூல் காங்கிரஸால் அதிக இடங்களில் வெற்றி பெற முடியாது என்றும், பாஜக 200 இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.