மத்திய பிரதேசத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பேரணி சென்ற பாஜகவினர் மீது, பெண் துணை ஆட்சியர் ஒருவர், தாக்குதல் நடத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் நாடு முழுவதும், பரப்புரை இயக்க பேரணிகளை பாஜக முன்னெடுத்து வருகிறது. இந்த வகையில், மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் (Rajgarh) நகரில் பாஜகவினர் பேரணி நடத்தினர்.
அப்போது, அங்கு வந்த பெண் துணை ஆட்சியர் பிரியா,தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் தொண்டர் ஒருவரை, அடித்து இழுத்துச் செல்ல முயன்றார். இதை கண்டு அங்கு வந்த சிலர், பிரியாவின் தலைமுடியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து போலீசார் அவரை மீட்டனர்.
மத்திய பிரதேசத்தை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக துணை ஆட்சியர் பிரியா அட்டூழியத்தில் ஈடுபட்டதாக, பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.