மும்பையில், புறாக்களின் எச்சங்களால் உருவான மாசு நிறைந்த காற்று, சுவாச கோளாறை கடுமையாக்கி, 2 பெண்களுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வரை, கொண்டுவந்து விட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
மும்பை போரிவிலி (Borivli) பகுதியைச் சேர்ந்த 38 வயதான பெண்ணும், பிரீச் கேண்டி (Breach Candy) பகுதியைச் சேர்ந்த 68 வயதான பெண்மணியும், நுரையீரல் செயலிழப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, கடந்தாண்டு, மத்திய மும்பையின், பரேல் (Parel) பகுதியில் உள்ள குளோபல் (Global) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
நோய்க்கான காரணம் குறித்து ஆராய்ந்த, நுரையீரல் நோய் சிகிச்சை மருத்துவர்கள், இருவருக்கும், புறாக்களின் எச்சங்களால் ஏற்பட்ட மாசடைந்த காற்றின் காரணமாகவே, நுரையீல் தொற்று ஏற்பட்டு, சுவாசக் கோளாறு உருவாகி, இறுதியில், அது, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வரை வந்துவிட்டதாக கூறியுள்ளனர்.