உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ரயில் நிலையங்களில் உருது மொழியில் எழுதப்பட்டிருக்கும் பெயர்களை, சமஸ்கிருத மொழியில் மாற்றி எழுதுவதற்கு ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே அங்குள்ள அறிவிப்பு பலகைகளில், ஆங்கிலம், இந்தி மற்றும் உருது மொழியில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநிலத்தின் 2வது அலுவல் மொழியில் பெயர்கள் எழுதப்பட வேண்டும் என்ற விதியின் படி, உருதுக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் பெயர்களை எழுத திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட்டில் கடந்த 2010ம் ஆண்டு நாட்டிலேயே முதல் முறையாக சமஸ்கிருதம், 2வது அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. இதனை சுட்டிக்காட்டி சமஸ்கிருதத்தில் பெயர்கள் மாற்றப்படும் எனத் தெரிவித்துள்ள ரயில்வே அதிகாரிகள், சமஸ்கிருதத்தில் ஊர்களின் பெயர்களை எவ்வாறு எழுதுவது என்பதை கண்டறிவதே சவாலாக இருக்கும் என கூறியுள்ளனர்.