ஜம்மு-காஷ்மீர் மக்கள், இணையதளங்களை பயன்படுத்தி, ஆபாச படங்களை பார்ப்பதாக, டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக வேந்தரும், நிதி ஆயோக் உறுப்பினருமான வி.கே.சரஸ்வத் தெரிவித்திருக்கும் கருத்து, சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், 370ஆவது சட்டப்பிரிவு நீக்கத்தைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில், இணையதள சேவை, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி கருத்துத் தெரிவித்துள்ள நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத், ஜம்மு-காஷ்மீரில் இணையதள சேவை நிறுத்தப்பட்டதால், நாட்டின் பொருளாதாராத்தில் எந்தவொரு குறிப்பிடத்தக்க தாக்கமும் ஏற்படவில்லை எனக் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மக்கள் இணையதளங்களை பயன்படுத்தி, ஆபாச படங்களை பார்ப்பதைத் தவிர, வேறு எந்த காரியத்தையும் செய்வதில்லை என்றும், எனவே, இணையதள சேவை முடக்கம் சரியான முடிவு தான் என்றும், வி.கே.சரஸ்வத் தெரிவித்திருக்கிறார்.