ஜம்மு காஷ்மீரில் மொபைல் சேவைகள் மீண்டும் இயங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ப்ரீபெய்டு மொபைல் சேவைகளுக்கான குரல் அழைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. 2 ஜி இணைய சேவைகளும் போஸ்ட்பெய்டு சிம் கார்டுகள் மூலம் பயன்படுத்த முடியும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.
பண்டிபோரா , குப்வாரா உளளிட்ட பத்து மாவட்டங்களில் இத்தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக அரசு செய்தித் தொடர்பாளர் ரோகித் கன்சால் ஜம்முவில் செய்தியாளர்கள் மத்தியில் அறிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதையடுத்து 2 ஜி இணைய சேவைகள் முடக்கப்பட்டிருந்தன. அவை பின்னர் ஜம்முவில் மட்டும் பின்னர் செயல்பாட்டுக்கு வந்தன. தற்போது ஜம்மு காஷ்மீருக்கு முழுமையாக தடை நீக்கப்பட்டுள்ளது. இதே போன்று லடாக் மாவட்டத்திலும் மொபைல் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. ஆனால் அப்பகுதியில் இணையத்திற்கான தடை மட்டும் நீடிக்கிறது.