தீவிரவாதிகள் இருவரை காரில் டெல்லி அழைத்துச் செல்லமுயன்ற போது கைது செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிகாரி தேவிந்தர் சிங் மீதான விசாரணையை தேசியப் புலனாய்வு அமைப்பு தொடங்கியது.
தீவிரவாதிகளுடன் அவருக்கு உள்ள தொடர்பு குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி அவர் நவீக் பாபு , ரஃபி அகமது ஆகிய இரண்டு தீவிரவாதிகளை காரில் அழைத்துச் சென்றதை தொலைபேசியை ஒட்டுக்கேட்டதன் மூலம் அறிந்த காவல்துறையினர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் 2 தீவிரவாதிகளுடன் தவேந்தர் சிங்கையும் கைது செய்தனர்.
இந்த வழக்கை உள்துறை அமைச்சகம் தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றியதை அடுத்து என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இது போன்று தீவிரவாதிகளுடனான தொடர்பு என்பது தேவிந்தர் சிங்கிற்கு பழக்கமான ஒன்றுதான் என்பது முதற்கட்ட விசாரணையில் புலனாகியுள்ளது.