நேபாளத்தின் நிலச்சரிவில் சிக்கிய 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட போதும் மேலம் பலர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.
தென் கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மலையேறும் வீரர்கள் பனிமலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் திரும்ப முடியாமல் தவித்தனர். ஹெலிகாப்டர்கள் மூலம் 200க்கும் மேற்பட்டோரை நேபாள அரசு மீட்டுள்ளது.
மேலும் அங்கு சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் மழை கொட்டி வருவதால் மீட்பு பணிகள் தாமதமடைவதாக விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 17 முதல் அப்பகுதியில் கடுமையான பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது.