ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளுக்கு உடந்தையாக இருந்து கைது செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் டி.எஸ்.பி. தேவேந்தர் சிங் மீதான வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்கிறது.
கார் ஒன்றில் பயங்கர ஆயுதங்களுடன் நவீத் பாபு, ஆரிப் ஆகிய தீவிரவாதிகளை தப்ப உதவும் நோக்கில் அழைத்துச் சென்ற தேவேந்தர் சிங்கை காஸிகுண்ட் என்ற இடத்தில் வைத்து கடந்த வார இறுதியில் போலீசார் கைது செய்தனர். அவர்களுடன் இருந்த இர்பான் மீர் என்ற வழக்கறிஞரும் பிடிபட்டார்.
கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி. தேவேந்தர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன் அவருக்கு வழங்கப்பட்ட வீரதீர பதக்கத்தையும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பறிமுதல் செய்தது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில், தேவேந்தர் மீதான வழக்கை என்.ஐ.ஏ.விசாரிக்கும் என அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.