மாமல்லபுரம் உள்ளிட்ட நாட்டின் 17 முக்கிய சுற்றுலா தலங்கள் ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத்சிங் படேல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மாமல்லபுரம், கர்நாடகத்தில் ஹம்பி, தாஜ்மஹால், கஜூராஹோ, அஜந்தா, எல்லோரா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், அதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக்க வேண்டும் என, சுற்றுலா அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரகலாத் சிங் கூறினார்.