பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த 3 சிறுமிகள் கடத்தப்பட்டது தொடர்பாக அந்நாட்டு தூதரக அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.
தர்பார்கர் மற்றும் ஜகோபாபாத் ஆகிய மாவட்டங்களில் சிறுபான்மை இந்து மதத்தை சேர்ந்த 3 சிறுமிகள் கடந்த 14 மற்றும் 15 ஆம் தேதி கடத்தப்பட்டனர். அந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரி ஒருவரை அழைத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.
கடத்தப்பட்ட சிறுமிகள் மூவரும் உடனடியாக வீடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதிகாரியிடம் வலியுறுத்ததப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்து பெண்கள் கடத்தப்பட்டு, கட்டாய திருமணம் செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்படும் விவகாரத்தில் ஏற்கனவே இந்தியா பாகிஸ்தானுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.