சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இரண்டு நாள் மியான்மர் பயணம், இந்திய வெளியுறவு வட்டாரங்களில் சலசலப்பையும், பாதுகாப்பு தொடர்பான சில கேள்விகளையும் ஏற்படுத்தி உள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், இன்று முதல் இருநாட்கள் அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் அவர் அந்நாட்டுத் தலைவர் ஆங் சான் சு கி (Aung San Suu Kyi) யை சந்தித்து பல்வேறு திட்டங்களுக்கான நிதியுதவியை வழங்குகினார்.
வங்களா விரிகுடா பகுதியில் கியாக்பியூ(Kyaukpyu) வில் ஆழ்கடல் துறைமுகம் அமைக்க சீனா கோடிக்கணக்கில் பணம் அளிக்க உள்ளது.
மியான்மர், இலங்கை, பாகிஸ்தான், ஆகிய நாடுகள் சீன ஆதரவு நிலையை எடுத்துள்ள நிலையில், இந்த 3 நாடுகளிலும் இந்தியாவைச் சுற்றி துறைமுகங்கள் அமைக்கப்படுவது போர்தந்திர அடிப்படையில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.