இந்தியாவில் அமேசான் நிறுவனம் செய்யும் முதலீடுகள் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அதன் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்தரை லட்சம் சிறு குறு நிறுவனங்கள் அமேசான் இணையதளத்தை பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
சிறு நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் விதத்தில் 100 கோடி டாலர் முதலீடு செய்யப்படும் என்றும், 2025க்குள் 1000 கோடி டாலர் மதிப்பில் இந்தியாவில் தயாரித்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்று அறிவித்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமேசான் நிறுவனத்தின் 100 கோடி டாலர் முதலீட்டால் இந்தியாவிற்கு பெரிய அளவில் எந்த லாபமும் இல்லை என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ்கோயல் நேற்று சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.