2025க்குள் இந்தியாவிடம் 5 எஸ்.400 வான்பாதுகாப்பு ஏவுகணை சாதனங்கள் ஒப்படைக்கப்பட்டுவிடும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
எதிரிநாடுகளின் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்து நடுவானில் இடைமறித்து தாக்கி அழிக்கும் எஸ்.400 சாதனங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே குடாசேவ் , துணை தூதர் ரோமன் பாபுஸ்கின் ,இந்தியாவிடம் 2025ம் ஆண்டுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்பதால் எஸ்.400 ஏவுகனை தடுப்பு சாதனங்கள் தயாரிப்பு தொடங்கப்பட்டுவிட்டதாக கூறினார் . காஷ்மீர் விவகாரம் குறித்த கேள்விக்கு அது இந்தியாவின் உள்விவகாரம்,அதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு வருவதை ரஷ்யா ஆதரிக்கவில்லை என்று நிகோலே குடாசேவ் பதிலளித்தார்.