நவி மும்பையில் உள்ள வாஷி பாலத்தில் நின்றுக் கொண்டு தற்கொலை செய்துக் கொள்வதாக மிரட்டிய பெண்ணை போக்குவரத்துப் போலீசார் பேசிக்கொண்டே சாதுர்யமாக மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் வாஷி பாலத்தின் மீது தடுப்பு கம்பிக்கு அடுத்த புறம் நின்றுக் கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள உள்ளதாக மிரட்டியுள்ளார். அப்பொழுது அங்கு விரைந்த போக்குவரத்து போலீசார் அந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தப்படியே அவரது அருகில் சென்று, கீழே விழாதபடி பிடித்து பாதுகாப்பாக மீட்டனர்.
இந்நிலையில், தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்கப்பட்ட வீடியோவை நவி மும்பை போலீஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் பாத்திமா ஷேக் என்பது தெரிய வந்துள்ளது.