நிலக்கரி விநியோக வழக்கில், அதானி நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
மத்திய நுகர்வோர் விவகார அமைச்சரவையின் கீழ் வரும் என்சிசிஎஃப் (NCCF) என்ற அமைப்பே நிலக்கரி விநியோகத்திற்கு அதானி நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகிக்க அதானி நிறுவனத்தை தேர்வு செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுச் சதி, மோசடி மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், நிலக்கரி விநியோகத்திற்கு அதானி நிறுவனத்தை தேர்வு செய்த என்சிசிஎஃப் முன்னாள் தலைவர் வீரேந்தர் சிங், முன்னாள் மேலாண் இயக்குநர் ஜி.பி.குப்தா, மூத்த ஆலோசகர் எஸ்.சி.சிங்கால் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இது பழைய விவகாரம் என்றும், நிலக்கரி விநியோகித்ததில் நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை என்றும் அதானி குழும செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.