தெலங்கானாவில் நகை வியாபாரியிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க, வெள்ளி நகைகள் வைக்கப்பட்டிருந்த பையை, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
நிசாமாபாத் மாவட்டம் தீச்பள்ளியை சேர்ந்த வியாபாரி ஒருவர், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, நகைக்கடையின் பூட்டை திறந்து கொண்டிருந்தார். அப்போது இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், வியாபாரியின் மோட்டார் சைக்கிளில் இருந்த பையை நைசாக தூக்கிக் கொண்டு தப்பிவிட்டனர்.
பையில் 300 கிராம் தங்க நகைகள், 13 கிலோ வெள்ளி நகைகள், 2 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வியாபாரி அளித்த புகாரின்பேரில், சிசிடிவி காட்சியை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.