பாமாயில் இறக்குமதி விவகாரத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று மலேசியா தெரிவித்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையை மலேசிய பிரதமர் மகாதிர் முகமது கடுமையாக விமர்சித்ததால், அங்கிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில் இந்தோனேசியாவில் இருந்து பாமாயிலை வர்த்தகர்கள் இறக்குமதி செய்கின்றனர். இந்தியாவின் நிலைப்பாடு மலேசியாவுக்கு கடும் நெருக்கடியை எற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பேசிய மலேசிய தொழில்துறை அமைச்சர் தெரசா கோக், பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா சில தடைகளை விதித்திருப்பது கவலை அளிப்பதாக குறிப்பிட்டார். இப்பிரச்சனையை தீர்க்க ராஜாங்க ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.